தவெக ஆட்சி நீடிக்குமா..? – திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சொன்ன விஷயம்.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!

By Soundarya on ஆனி 18, 2026

Spread the love

தமிழகத்தில் தவெக ஆட்சி நீடிக்குமா என்பது குறித்துப் பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அது ஆட்சியில் இருப்பவர்களின் செயல்பாடுகளைப் பொறுத்தது என்று தெரிவித்துள்ளார். மேலும், தற்போதைய அரசு வெளியிட்டது வெள்ளை அறிக்கை அல்ல, அது ஒரு ‘கருப்பு அறிக்கை’ என்று அவர் சாடியுள்ளார். புதியவர்களுக்கு நிதித்துறை குறித்த நுணுக்கங்கள் புரிய வாய்ப்பில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளதாகக் குற்றம் சாட்டிய துரைமுருகன், குற்றவாளிகளைக் கடுமையான முறையில் ஒடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் குற்றவாளிகளைச் சுட்டுத் தள்ள வேண்டும் என்றும் அவர் ஆக்ரோஷமாகப் பேசியுள்ளார். இவருடைய இந்த அதிரடியான கருத்துக்கள் தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்னன.