ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்த விஜய்… பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த முக்கிய புள்ளி… தமிழக அரசியலில் பரபரப்பு.. !

By Nanthini on தை 11, 2026

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக விஜய் களத்தில் இறங்கிய பிறகு தமிழக தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகவே உள்ளது. அதிலும் விஜயின் தமிழக வெற்றிக்கழக கட்சியில் அதிமுகவின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் இணைந்த பிறகு மாற்று கட்சியினர் பலரும் கட்சி தாவி வருகிறார்கள். குறிப்பாக அதிமுகவில் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை டார்கெட் செய்து செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தி கட்சியில் இணைத்து வருகின்றார்.

இந்நிலையில் ஓசூர் அருகே சாம பண பள்ளி பஞ்சாயத்தை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் தொழிலதிபர் எஸ் ஆர் சம்பங்கி முன்னிலையில் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்தனர். அதேபோல சேலம் சங்ககிரி வங்காளியூர் முன்னாள் கவுன்சிலர் ரமேஷ், காசிராஜன், ஜலகண்டாபுரம் திமுக 15 வது கோட்ட அமைப்பாளர் சுகுமார் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட திமுகவினர் இன்று கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றிக்கழகம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன் முன்னிலையில் முறைப்படி கட்சியில் இணைந்தன. திமுகவினர் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்துள்ளது சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.0