திமுக அயலக அணிச் செயலாளரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான எம்.எம். அப்துல்லா அவர்களின் தாயார் நபீசா பீவி (85) வயது மூப்பு மற்றும் உடல்நலக் கோளாறுகள் காரணமாக இன்று காலை 9.30 மணிக்கு காலமானார். பாசத்துடன் வளர்த்து ஆளாக்கிய அன்னையின் மறைவால் துயரத்தில் இருக்கும் எம்.எம். அப்துல்லா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு திமுக தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் தொடர்ந்து தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பாசத்துடன் வளர்த்து சான்றோனாக்கி மகிழ்ந்த அன்னையை இழந்து வாடும் தம்பி அப்துல்லாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறினேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் திமுக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான தங்கம் தென்னரசு வெளியிட்ட பதிவில், அன்புத் தாயாரை இழந்து வாடும் சகோதரர் அப்துல்லாவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் இந்தத் துயரமான நேரத்தில் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
உங்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதும், இந்த நாள் இவ்வளவு சிரமமாக அமைந்ததும் வருத்தமளிக்கிறது. காய்ச்சலோடு அதிகாலையிலேயே விழிப்பதும், உடம்பில் தெம்பே…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ்பாத் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் அமைந்துள்ள விண்ட்சர் பாரடைஸ் குடியிருப்பு லிஃப்ட்டில், செல்லப்…
தாய்லாந்தின் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சி பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவரின் தோளில் எதிர்பாராதவிதமாக வௌவால் ஒன்று வந்து அமர்ந்தது. பயத்தில்…
தந்தையின் அன்பு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத தூய்மையானது. தன் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காகத் தன் சொந்த ஆசைகளைக்கூடப் புன்னகையோடு தியாகம் செய்யும்…
மும்பையின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் வழிபடப்படும் லால்பாக் சா ராஜா விநாயகர் சதுர்த்தி 2026 விழாவை முன்னிட்டு, முக்கியப் பிரமுகர்கள்…
மும்பையின் மிகவும் புகழ்பெற்ற லால்பாக் சா ராஜா விநாயகர் பந்தலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாலிவுட் நடிகரும் சண்டைக்கலைஞருமான வித்யுத்…