2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் வரலாற்றிலேயே முன்நாடியிராத வகையில் 21 கட்சிகளை உள்ளடக்கிய ஒரு பிரமாண்டமான கூட்டணியை திமுக ஒருங்கிணைத்துள்ளது. கடந்த மூன்று தேர்தல்களாக (2019, 2021, 2024) வெற்றிகரமாகத் தொடரும் இக்கூட்டணி, ஒரு துளிகூடச் சிதறாமல் அப்படியே நீடிப்பதோடு மட்டுமல்லாமல், தற்பொழுது அதிமுகவின் நீண்டகால ஆதரவு சக்திகளாகக் கருதப்பட்ட பிரேமலதா விஜயகாந்த், தமிமுன் அன்சாரி, நெல்லை முபாரக், கருணாஸ் மற்றும் தனியரசு போன்ற முக்கியத் தலைவர்களையும் தன்பக்கம் ஈர்த்து நான்காவது முறையாகக் களமிறங்குகிறது.
ஒரே சித்தாந்தப் புள்ளியில் இத்தனை பெரிய எண்ணிக்கையிலான கட்சிகள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பயணிப்பதும், எதிரணியின் பலத்தை முற்றிலுமாகக் குறைக்கும் வகையில் புதிய சேர்க்கைகளை உறுதி செய்திருப்பதும் தமிழக அரசியல் களத்தில் திமுகவின் வியூகத்திற்குப் புதிய பரிமாணத்தைக் கொடுத்துள்ளது.
