200 பிளான் அவுட்?…. திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ‘செக்’… கமலுக்கு அடித்த ஜாக்பாட்… கசிந்த ரகசிய பட்டியல்…!

By Nanthini on தை 25, 2026

Spread the love

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த முதற்கட்டத் தகவல்கள் கசிந்து அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த மெகா கூட்டணியில், கடந்த தேர்தல்களைப் போலவே தொகுதிப் பங்கீட்டு ஃபார்முலா கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டு, முதலமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த உத்தேசப் பட்டியலின்படி, திமுக இம்முறை சுமார் 164 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது. கூட்டணிக் கட்சிகளான காங்கிரசுக்கு மீண்டும் 25 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்றும், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் இணைந்த நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு 3 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

   

கூடுதல் சிறப்பாக, தேமுதிக மற்றும் பாமக ஆகிய கட்சிகளைத் தங்கள் பக்கம் இழுக்க திமுக தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது. அதன் ஒரு பகுதியாக, தேமுதிகவிற்கு 6 சட்டமன்றத் தொகுதிகளுடன் ஒரு ராஜ்யசபா இடமும், பாமக தரப்புக்கு 4 தொகுதிகளும் ஒதுக்கப்படலாம் என்ற செய்தி அரசியல் அரங்கில் விவாதங்களை கிளப்பியுள்ளது. இதர சிறிய கட்சிகளான கொமதேக, ஐயுஎம்எல் மற்றும் மமக ஆகியவற்றுக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்கள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது.

   

அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளிவராத நிலையில், இந்தத் தொகுதிப் பங்கீடு வரைவுப் பட்டியல் திமுகவின் தேர்தல் வியூகத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. குறிப்பாக, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் சிறிய கட்சிகளுக்கும், புதிய கூட்டணிக் கட்சிகளுக்கும் இடமளிப்பதன் மூலம் 2026 தேர்தலில் வலுவான வெற்றியைப் பதிவு செய்ய திமுக தலைமை இப்போதே காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளது.