திமுக – அதிமுகவிற்கு விஜய் வைத்த ‘செக்’.. அறிவாலயத்தை உலுக்கிய அந்த சம்பவம்… உள்ளாட்சித் தேர்தலில் காத்திருக்கும் அடுத்த ட்விஸ்ட்….!

Spread the love

தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாபிக், அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளில் இருந்தும் முக்கிய நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கிப் படையெடுத்து வருவதுதான். கடந்த சட்டசபைத் தேர்தலில் வெறும் 10 முதல் 15 இடங்களை மட்டுமே விஜய் பிடிப்பார் என்று அரசியல் விமர்சகர்கள் குறைத்து மதிப்பிட்ட நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக 108 தொகுதிகளை வென்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தது. ஆட்சி அமைக்க போதிய இடங்கள் கிடைக்காமல் தவித்த நிலையில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு விஜய் ஆட்சியைப் பிடித்துள்ளார். இந்த அசுர வளர்ச்சி எடப்பாடி பழனிசாமியை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ள அதே வேளையில், திமுக தலைமையையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தவெக ஆட்சி அமைத்த பிறகு, விஜய்க்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. திமுக கூட்டணியில் இருந்த மதிமுக தற்போது விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளதோடு, சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாத வேறு சில கட்சிகளும் தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளன. வரும் உள்ளாட்சித் தேர்தலில் பெருவாரியான இடங்களில் போட்டியிடலாம் என்பதும், இடைத்தேர்தல்களில் தங்களது கட்சியினரை நிற்க வைத்து சட்டமன்றத்திற்கு அனுப்பலாம் என்பதுமே இக்கட்சிகளின் திட்டமாகச் சொல்லப்படுகிறது. இதனால் வரும் காலங்களில் விஜய்க்கு ஆதரவு இன்னும் அதிகரிக்கக்கூடும் என்ற அரசியல் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

மறுபுறம், அதிமுகவை மெல்ல மெல்லச் சாய்த்து நிலைகுலையச் செய்து வருகிறது தமிழக வெற்றிக் கழகம். ஏற்கனவே 6 அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்துள்ளனர். இவர்களுடன் முன்னாள் அமைச்சர்களும், மாவட்ட அளவிலான முக்கிய நிர்வாகிகளும் கட்சித் தாவி வருவது அதிமுக தலைமைக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. அதிமுகவின் இந்த பலவீனத்தை தவெக தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, அக்கட்சியின் வாக்கு வங்கியைத் தன்வசப்படுத்தி வருகிறது.

அதிமுக மட்டுமல்லாமல், ஆளுங்கட்சியாக இருந்த திமுகவிலும் தவெக சத்தமில்லாமல் தன் கைவரிசையைக் காட்டி வருகிறது. நூற்றுக்கணக்கான ஒன்றிய செயலாளர்கள் ஏற்கனவே தவெக-வில் இணைந்துள்ள நிலையில், தற்போது நகர, பகுதி, வட்ட அளவிலான நிர்வாகிகள் மற்றும் கவுன்சிலர்களும் கட்சி மாறி வருகின்றனர். குறிப்பாக, திமுக குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப், சென்னையின் முக்கிய நிர்வாகிகளான ஆயிரம் விளக்கு ரவி, சாமுவேல், மகளிரணி சௌமியா, முன்னாள் எம்எல்ஏ கலைராஜன் மற்றும் திருவள்ளூர் குமரன் ஆகியோர் தவெக-வில் இணைந்திருப்பது அண்ணா அறிவாலய வட்டாரங்களை நிலைகுலையச் செய்துள்ளது. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவரும் தவெக-வில் இணையப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியாகி உள்ள தகவல், திமுக தலைமையை அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கைகளுக்குத் தள்ளியுள்ளது.

Nanthini

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

5 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

5 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

5 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

5 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

5 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

5 மணத்தியாலங்கள் ago