திமுகவுக்கு போட்டியாக இபிஎஸ் போட்ட மாஸ்டர் பிளான்…. கூண்டோடு அதிமுகவில் இணைந்த திமுக நிர்வாகிகள்…. காலையிலேயே ஸ்டாலினுக்கு ஷாக்….!

By Nanthini on புரட்டாதி 20, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே திமுக தங்கள் கூட்டணியை பலமாக வைத்துள்ள நிலையில் ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையில் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் திமுகவுக்கு போட்டியாக அதிமுகவில் மாற்றுக் கட்சியினரை இணைக்கும் பணியை இபிஎஸ் தீவிர படுத்தியுள்ளார். அவ்வகையில் திமுக சேலம் மாநகர் மாவட்ட விவசாய பிரிவு துணைச் செயலாளர் ஜி.பி ராஜா உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்ற இபிஎஸ் அதிமுக அடையாள அட்டைகளை வழங்கி தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தியுள்ளார்.