திமுகவின் கோட்டை சரிந்தது… கூண்டோடு விலகி அதிமுகவில் ஐக்கியம்… செம குஷியில் எடப்பாடி…!

By Nanthini on கார்த்திகை 2, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. இதனிடையே பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. கட்சியில் என்னதான் நடந்தாலும் இபிஎஸ் தனது வெற்றி பயணத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்.

இப்படியான நிலையில் தஞ்சாவூரில் திமுக மற்றும் தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட மாற்று கட்சிகளில் இருந்து விலகிய 200க்கும் மேற்பட்டோர் இரவில் அதிமுகவில் இணைந்தனர். மத்திய மாவட்ட செயலாளர் சேகர் முன்னிலையில் கட்சியில் இணைந்து அவர்களுக்கு அதிமுகவினர் சால்வை போர்த்தி வரவேற்றனர். அதிமுக செல்வாக்கு மிக்க மேற்கு மண்டலத்தில் திமுகவினர் மாற்றுக் கட்சியினரை சேர்த்து வரும் நிலையில் திமுக செல்வாக்கு மிகுந்த டெல்டாவில் அதிமுகவும் அந்த பணியை தொடங்கியுள்ளது