சேலம் மாவட்டத்தில், நிலத்தகராறில் திமுக நிர்வாகி சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருமந்துறை கிராங்காடு கிராமத்தில், திமுக கிளைச் செயலாளராக பணிபுரிந்தவர் ராஜேந்திரன். இவருக்கும் அவருடைய உறவினர்களுக்கும் இடையே நிலத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் எதிர்தரப்பினர், ராஜேந்திரனை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
