திமுகவில் அடுத்த விக்கெட் அவுட்… அதிமுகவில் இணையும் முக்கிய புள்ளிகள்… ஸ்டாலின் தலையில் இடியை இறக்கிய எடப்பாடியார்….!

By Nanthini on மாசி 19, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. ஆளுங்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய இரு துருவங்களும் தங்கள் செல்வாக்கை நிரூபிக்க, மாற்றுக் கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளைத் தங்கள் பக்கம் இழுப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த வரிசையில், மதுரையில் திமுகவின் அஸ்திவாரமாகத் திகழ்ந்த மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள் அடுத்தடுத்து அதிமுகவில் இணைந்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் திமுகவின் முன்னாள் துணை மேயர் மன்னன் அதிமுகவில் இணைந்தது அந்தப் பகுதியில் திமுகவிற்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்தில் உட்கட்சிப் பிரச்சனையால் நீக்கப்பட்ட தனக்கு, மீண்டும் மக்கள் பணியாற்ற வாய்ப்பளிக்க திமுக தலைமை மறுத்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். சிலரின் அதிகார மமதையால்தான் தான் ஒதுக்கப்பட்டதாகக் கூறிய மன்னன், வரவிருக்கும் தேர்தலில் மதுரையின் 10 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறத் தீவிரமாக உழைப்போம் எனச் சவால் விடுத்துள்ளார்.

   

Madurai District DMK Executive S R Gopi is reported to join AIADMK today திமுகவிற்கு அடுத்தடுத்து அடி.! அதிமுகவில் இணையும் மு.க.அழகிரியின் முக்கிய ஆதரவாளர்கள்- அடுத்தது யார்.?

   

இந்த அதிரடி மாற்றத்தைத் தொடர்ந்து, மு.க. அழகிரியின் மற்றொரு முக்கிய ஆதரவாளரும், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினருமான எஸ்.ஆர். கோபி இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அதிமுகவில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரையில் பொட்டு சுரேஷிற்கு அடுத்தபடியாக அழகிரிக்கு வலதுகரமாகத் திகழ்ந்தவர் கோபி. கடந்த சில ஆண்டுகளாக ஸ்டாலின் ஆதரவாளராகச் செயல்பட்டு வந்த போதிலும், அவருக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படாததால் அதிருப்தியில் இருந்த அவர், தற்போது இலைக்கட்சிக்குத் தாவ முடிவெடுத்துள்ளார்.

 

மதுரை மாவட்டத்தில் திமுக – அதிமுக ஆகிய இரு கட்சிகளும் சம பலத்துடன் மோதி வரும் சூழலில், அழகிரியின் விசுவாசிகள் அடுத்தடுத்து அதிமுகவில் இணைவது திமுக தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் மாவட்டங்களின் தேர்தல் வெற்றியைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் இத்தகைய சீனியர் நிர்வாகிகள் வெளியேறுவது, வரும் சட்டமன்றத் தேர்தலில் மதுரையில் ஒரு புதிய அரசியல் மாற்றத்திற்கு வித்திடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.