தவெகவுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கூட்டணி அமைத்திருந்த போதிலும், இடைத்தேர்தலில் இஸ்லாமிய சமூகத்தினரின் வாக்குகள் பெருமளவில் திமுகவின் பக்கமே சாய்ந்துள்ளதை தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. குறிப்பாக, முஸ்லிம் வாக்காளர்கள் அதிகம் வசசிக்கும் தாராபுரம் தொகுதிக்குட்பட்ட ஜின்னா மைதானப் பகுதியின் 4 வாக்குச்சாவடிகளில் திமுக 1,498 வாக்குகளைப் பெற்று வலுவான முன்னிலை வகித்துள்ள நிலையில், தவெக வேட்பாளர் 545 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.
சிறுபான்மையினரின் வாக்கு வங்கி வெறும் கூட்டணிக் கணிப்புகளால் மட்டும் மாறிவிடாது என்பதையும், களத்தில் உள்ள பாரம்பரியமான அரசியல் பிணைப்பே தீர்மானிக்கும் சக்தியாக விளங்கும் என்பதையும் உணர்த்தும் வகையில், இந்தத் தேர்தல் முடிவு தவெகவுக்கு ஒரு முக்கியமான அரசியல் பாடமாக அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
