நாளை நண்பகல் 12 மணிக்கு முக்கிய முடிவு.. திடீர் ட்விஸ்ட் வைத்த ஸ்டாலின்… திமுக தலைமை அறிவிப்பு…!

By Nanthini on புரட்டாதி 8, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே முதல்வர் ஸ்டாலின் தனது திமுக கூட்டணி பலமாக உள்ளதால் இந்த முறையும் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற நிலைப்பாட்டோடு செயல்பட்டு வருகின்றார். அதேசமயம் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையும் நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நாளை நண்பகல் 12 மணியளவில் காணொளி காட்சி மூலமாக நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து ஸ்டாலின் திரும்பிய நிலையில் நாளை நடைபெற உள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.