“அவங்க ஓட்டுக்கு ரூ.5000 கொடுக்குறாங்க”….. தாராபுரத்தில் கதறவிட்ட முதியவர்… அதிர்ச்சியில் உறைந்த திமுக பிரமுகர்கள்…..!

Spread the love

தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், தவெக தரப்பில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்படுவதாக வெளியாகி உள்ள வீடியோ அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தாராபுரத்தில் திமுகவினர் வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்துக் கொண்டிருந்த போது, மூத்த வாக்காளர் ஒருவர் “தவெகவினர் ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் தருவதாகக் கூறுகிறார்கள்; நீங்கள் எவ்வளவு தருவீர்கள்?” என்று கேட்டு அதிர்ச்சி அளித்துள்ளார். இதனால் நிலைகுலைந்த திமுகவினர், “மேடைகளில் வாக்குக்குப் பணம் கொடுக்க மாட்டோம் என விஜய் பேசி வரும் நிலையில், உண்மையிலேயே எந்தக் கட்சி அப்படிச் சொன்னது? விசில் கட்சியா?” எனத் திரும்பத் திரும்பக் கேட்க, அந்த வாக்காளரும் அது விசில் கட்சி தான் என உறுதிப்படுத்தியுள்ளார்.

அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் தவெக, திமுக, அதிமுக, நாதக மற்றும் கம்யூனிஸ்ட்டுகள் என ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது. அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் மதுராந்தகத்திலும், சத்தியபாமா தாராபுரத்திலும் போட்டியிடுகின்றனர். திமுக சார்பில் மதுராந்தகத்தில் பரந்தாமனும், தாராபுரத்தில் சுகன்யாவும் களமிறக்கப்பட்டுள்ளனர். திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முதற்கட்டப் பிரச்சாரத்தை முடித்துள்ள நிலையில், ஸ்டாலினும் விரைவில் பிரச்சாரத்திற்கு வரவுள்ளார். இதனால் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

குறிப்பாக, தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு வாக்காளர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலைச் சமாளிக்கவும், வாக்காளர்களைத் தங்கள் பக்கம் இழுக்கவும் தவெகவினர் களத்தில் புது உத்திகளைக் கையாண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாகவே, வாக்காளர்களுக்குக் பணம் கொடுக்கும் வாக்குறுதிகளைப் பரப்பும் பணிகளில் தவெகவினர் இறங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

முன்னாள் அமைச்சர்கள் கே.என். நேரு, செந்தில் பாலாஜி, மு.பெ. சாமிநாதன், அன்பில் மகேஸ் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தாராபுரத்தில் முகாமிட்டு, மேடைப் பேச்சுகளைத் தாண்டி நேரடியாக ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டி வாக்கு சேகரித்து வருகின்றனர். இத்தகைய தீவிரப் பிரச்சாரத்தின் போது வெளிவந்துள்ள இந்த விடியோ பதிவு, “நாங்கள் தூய்மையான அரசியல் செய்கிறோம்” என்ற தவெகவின் பிரச்சார முழக்கத்தின் மீதான நம்பிக்கையைக் கேள்விக்குறியாக்கியுள்ளதோடு, தாராபுரம் இடைத்தேர்தல் களத்தை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.

Nanthini

Recent Posts

விபத்துனு நினைச்சா பெருங் கொள்ளை… சினிமா பாணியில் அரங்கேறிய ரூ.14 லட்சம் ஸ்கெட்ச்… நடுரோட்டில் மோதிய ஸ்கூட்டர்… வெளியானது அதிர்ச்சி CCTV…!!

டேராடூனின் படேல் நகரில் நிகழ்ந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…

1 மணத்தியாலம் ago

“என் பொண்ணு கூட பழகுவியா?”… நள்ளிரவில் வீடு புகுந்து வெறிச்செயல்… மகளின் கள்ளக்காதலனை தீர்த்துக்கட்டிய தந்தை… வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்…!!

மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ், பாபு என்பவரின் மகளோடு நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்தத் தொடர்பை பாபு…

2 மணத்தியாலங்கள் ago

“பைக்கும் செயினும் தரலையா?”… பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த கணவர்… வரதட்சணை கேட்டு கொடுமை… நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!!

சம்பல் மாவட்டம் பஹ்ஜோய் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கூடுதல் வரதட்சணையாக மோட்டார் சைக்கிளும் தங்கச் சங்கிலியும் தராத காரணத்தால் ராதா…

2 மணத்தியாலங்கள் ago

“அம்மா நான் எந்த தப்பும் பண்ணல!”… கதறிய மகள்… கருவி சொன்ன பொய்… ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து கதறி அழுத தாய்… மருத்துவமனையில் உடைந்த மர்மம்…!!

வீட்டில் பரிசோதித்த கர்ப்பப் பரிசோதனை முடிவும் வயிறு பெரிதானதும் ஒரு தாய்க்குத் தன் பதின்ம வயது மகள் மீது தவறான…

2 மணத்தியாலங்கள் ago

அதிசயமா? தெய்வத்தின் அவதாரமா?… ஆற்றில் கிடைத்த விசித்திர தாடைக்கல்… சாமி என திரண்டு வணங்கும் மக்கள்… நடந்தது என்ன?…!!

மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டம், தேவரி வட்டாரத்தில் அமைந்துள்ள படாய் கிராமத்து நர்மதை ஆற்றங்கரையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மண்ணைத் தோண்டியபோது…

2 மணத்தியாலங்கள் ago

வீடு திரும்பாத தந்தை… துப்பாக்கியை காட்டி மிரட்டிய கும்பல்… சகோதரிகளுக்கு நேர்ந்த கொடூரம்… அதிரடி வேட்டையில் சிக்கிய காமுகர்கள்…!!

பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…

2 மணத்தியாலங்கள் ago