தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ (INDIA) கூட்டணியில் இருந்து தி.மு.க. அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, நீண்டகால கூட்டாளியான காங்கிரஸ் கட்சி தி.மு.க-வுடனான உறவை முறித்துக் கொண்டு, தமிழகத்தில் தமிழக வெற்றி க்ழகம் (TVK) தலைமையிலான அரசுக்கு ஆதரவளித்ததால் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தாங்கள் தவெக-வுடன் இணைந்துதான் போட்டியிடப் போவதாக காங்கிரஸ் வெளிப்படையாக அறிவித்துவிட்டதால், தி.மு.க இனி எவ்வாறு ‘இந்தியா’ கூட்டணியில் தொடர முடியும் என்று டி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸின் இந்த அரசியல் “துரோகத்தால்” தி.மு.க தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கடுமையான அதிருப்தியும் ஏமாற்றமும் ஏற்பட்டுள்ளதால், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஜூன் 8-ஆம் தேதி புதுடெல்லியில் நடைபெறவுள்ள ‘இந்தியா’ கூட்டணிக் கூட்டத்தை தி.மு.க முற்றிலுமாகப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. சுருக்கமாகச் சொன்னால், காங்கிரஸ் பங்கேற்கும் எந்தவொரு கூட்டத்திலும் தி.மு.க பங்கெடுக்காது என்று தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், நாடாளுமன்றத்தில் மக்கள் நலன் சார்ந்த முக்கியப் பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பும்போது, தி.மு.க எம்.பி-க்கள் தங்களின் ஆதரவைத் தொடர்ந்து வழங்குவார்கள் என்றும், தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்குத் தடையாக இருக்க மாட்டார்கள் என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
டேராடூனின் படேல் நகரில் நிகழ்ந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…
மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ், பாபு என்பவரின் மகளோடு நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்தத் தொடர்பை பாபு…
சம்பல் மாவட்டம் பஹ்ஜோய் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கூடுதல் வரதட்சணையாக மோட்டார் சைக்கிளும் தங்கச் சங்கிலியும் தராத காரணத்தால் ராதா…
வீட்டில் பரிசோதித்த கர்ப்பப் பரிசோதனை முடிவும் வயிறு பெரிதானதும் ஒரு தாய்க்குத் தன் பதின்ம வயது மகள் மீது தவறான…
மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டம், தேவரி வட்டாரத்தில் அமைந்துள்ள படாய் கிராமத்து நர்மதை ஆற்றங்கரையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மண்ணைத் தோண்டியபோது…
பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…