ராணிப்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் அமைச்சர் காந்தியின் மகன் வினோத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவரே மீண்டும் போட்டியிடப் போவதாக அமைச்சர் காந்தி உறுதிப்படுத்தியுள்ளார்.
சீட் மறுக்கப்பட்டதால் அவர் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், தற்போது திமுக தலைமை தன்னை வேட்பாளராக அறிவித்துவிட்டதாக அவர் கூறியுள்ளார். இதனையடுத்து, இன்று அவர் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்ய உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
