திமுகவின் திராவிட மற்றும் சமூகநீதிக் கொள்கைகளின் பெரும்பகுதியைத் தத்துவார்த்த ரீதியாக ஏற்றுக்கொண்டு, அதிமுகவின் எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா பாணியிலான ‘ஒற்றைத் தலைமை’ பிம்பத்தைக் கட்சியின் ஒரே முகமாக விளங்கும் சி.எம். விஜய் முன்னிறுத்தி, அதேவேளையில் தற்போதைய பாஜகவைப் போலத் தேர்தல் வெற்றி மற்றும் கட்சி விரிவாக்கத்திற்காக மாற்றுக்கட்சியினரைத் தயக்கமின்றி இணைத்துக் கொள்ளும் நடைமுறை அரசியலைத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மேற்கொண்டுள்ளது.
திராவிட பாரம்பரியம், வலுவான ஆளுமை தலைமை, மற்றும் சாணக்கியத்தனமான அரசியல் சேர்க்கை ஆகிய இம்மூன்று பிரதான கட்சிகளின் ஃபார்முலாக்களை நேர்த்தியாகக் கலந்து தனக்கான புதிய அரசியல் பாதையை விஜய் வகுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
