தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனிப்பெரும்பான்மை பெறாததால், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் விஜய் தலைமையில் புதிய அரசு அமைந்தது. தேர்தலுக்கு முன்பு திமுக கூட்டணியில் நீடித்துக்கொண்டு, தவெகவிற்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு தருவதாகக் கூறிய விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள், திடீரென தவெக அமைச்சரவையில் இணைந்தன. விசிகவின் வன்னியரசு மற்றும் முஸ்லிம் லீக்கின் ஷாஜஹான் ஆகியோருக்கு அமைச்சரவையில் துறைகள் ஒதுக்கப்பட்ட இந்த அதிரடி திருப்பம் திமுக தரப்பில் பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் வெளிப்பாடாக, திமுக எம்பி ஆ.ராசா தனது சமூக வலைதளப் பக்கத்தில் விசிகவை விமர்சித்து முதலில் ஒரு பதிவை இட்டு, பின்னர் அதை நீக்கினார். தொடர்ந்து அவர், “என் வீட்டு தென்னை எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் முடத்தெங்கு என பெயர்.. இலக்கியத்தில் முடத்தெங்கு – அரசியலில் என்ன பெயர்?” என்று ஒரு புதிய உவமையைக் கேள்வியாகப் பதிவிட்டார். திமுக கூட்டணியில் இருந்து வளர்ந்துவிட்டு, இப்போது தவெக அமைச்சரவையில் பங்கு பெற்றுப் பலன் அனுபவிக்கிறார்கள் என்பதை நேரடியாகக் குறிப்பிடாமல் விசிகவைச் சாடும் நோக்கில் அவர் இப்பதிவை வெளியிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.
ஆ.ராசாவின் இந்த இளநீர் விமர்சனம் திமுக-விசிக கூட்டணியில் பெரும் சலசலப்பையும், பதற்றத்தையும் அதிகரித்துள்ளது. இதற்கு விசிக தரப்பிலிருந்து, “அதிகாரம் எளியவருக்குப் போகிறது, அதில் உங்களுக்கு ஏன் இத்தனை ஆத்திரம்?” என்று இணையத்தில் கடுமையான பதிலடிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. “வெளியில் இருந்து ஆதரிப்போம்” என்று கூறிவிட்டு தவெக ஆட்சியில் பங்கெடுத்த விசிகவின் இந்த அரசியல் நகர்வு திமுகவின் மூத்த தலைவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக மாறியுள்ளதால், தமிழக அரசியலில் கூட்டணி சமன்பாடுகள் தற்பொழுது சூடுபிடித்துள்ளன.
தூத்துக்குடியில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன்,…
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பத்மநாபபுரம் ஆர்.சி தெருவைச் சேர்ந்தவர் பெர்ஜின். திரிபுரா மாநிலத்தில் மத்திய காவல் படையில் பணிபுரிந்து…
அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் முக்கிய நிர்வாகிகளின் விலகல் சம்பவங்கள் அக்கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. இன்று காலையில் திருவள்ளூர்…
உடல்நலக்குறைவு காரணமாக தமிழக முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை…
இந்த கொடூரமான குற்றச் சம்பவம் 2019ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் ஈவ் அன்று தொடங்கியது. கெவின் பேக்கன் என்ற இளைஞர் காணாமல்…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுமியின் கியூட்டான வீடியோ இணையவாசிகளின் இதயங்களை வென்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு…