யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்… 2026-ல் திமுக, அதிமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம்?… விகடன் கணிப்பால் ஆடிப்போன கோட்டை…!

By Nanthini on சித்திரை 18, 2026

Spread the love

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காது என்றும், கூட்டணி கட்சிகளின் தயவின்றி திமுக அல்லது அதிமுக ஆட்சியமைக்க முடியாது என்றும் விகடன் கணித்துள்ளது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், திமுக 97 இடங்களிலும், அதிமுக 75 இடங்களிலும் மட்டுமே வெற்றிபெற வாய்ப்புள்ளதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

‘ஆட்சியில் பங்கு இல்லை’ என்று இதுவரை கூறிவந்த திராவிடக் கட்சிகள், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நிலவும் அரசியல் யதார்த்தத்தின் காரணமாக, தவிர்க்க முடியாமல் முதன்முறையாகக் கூட்டணி ஆட்சியைத் தமிழகத்தில் அமைக்கும் சூழல் உருவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முன்னறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய சகாப்தத்திற்கான தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.