ராஜ்யசபா சீட் கொடுத்தால் தான் கூட்டணி… நெருக்கடி கொடுக்கும் தேமுதிக..? தவிப்பில் அதிமுக தலைமை… செக் வைத்த பிரேமலதா..!!

By Soundarya on மாசி 18, 2026

Spread the love

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேமுதிகவின் கூட்டணி முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த தேமுதிக, வரும் சட்டமன்றத் தேர்தலில் தனது நிலைப்பாடு குறித்து இன்னும் இறுதி முடிவை அறிவிக்காமல் மௌனம் காத்து வருகிறது. இதனால் அக்கட்சி மீண்டும் அதிமுக உடனே பயணிக்குமா அல்லது திமுக பக்கம் சாயுமா என்பதில் அரசியல் வட்டாரத்தில் பெரும் குழப்பமும் விவாதமும் நிலவுகிறது.

இந்த இழுபறிக்கு இடையே, அதிமுகவின் இரண்டு மாநிலங்களவை (Rajya Sabha) உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிய உள்ளதைச் சாதகமாகப் பயன்படுத்தி, தேமுதிக ஒரு சீட் கேட்டு வலியுறுத்தி வருவதாகத் தெரிகிறது. கூட்டணியில் தொடர வேண்டும் என்றால் ஒரு எம்பி சீட் கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என தேமுதிக பிடிவாதம் காட்டி வருவது, தற்போது அதிமுக தலைமைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.