பேச்சுவார்த்தை சக்சஸ்… விட்டுக்கொடுத்த ஸ்டாலின்… திமுகவில் இணையும் தேமுதிக..? திடீர் திருப்பதால் அதிர்ச்சியில் அதிமுக…!!

By Soundarya on தை 23, 2026

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்துப் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) தேமுதிக இல்லை என்பது ஓரளவிற்கு உறுதியாகியுள்ள நிலையில், அக்கட்சியைத் தங்கள் கூட்டணிக்கு இழுக்க திமுக ஆர்வம் காட்டி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திமுக மற்றும் தேமுதிக இடையேயான முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் சாதகமான திசையில் நகர்ந்து வருவதாகவும், தேமுதிகவின் வரவை உறுதி செய்ய திமுக சில முக்கியத் தொகுதிகளை விட்டுக் கொடுக்க முன்வந்துள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். அதே சமயம், அதிமுக மற்றும் தவெக ஆகிய கட்சிகளுடனும் தேமுதிக பேரம் பேசி வருவதால், ஜனவரி இறுதியில் நடைபெறவுள்ள கட்சி மாநாட்டிற்குப் பிறகே இறுதி முடிவு அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேமுதிகவின் இந்த நகர்வு திமுக கூட்டணியைப் பலப்படுத்தும் ஒரு முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.