மாறும் கூட்டணி… தேமுதிகவுக்கு பெரும் பின்னடைவு?… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்….!

By Nanthini on ஐப்பசி 7, 2025

Spread the love

தமிழகத்தில் தற்போது 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் ஒரு பக்கம் கூட்டணி மறுபக்கம் தேர்தல் பிரச்சாரம் என அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.  இதனிடையே தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் தங்கள் கூட்டணியை தேமுதிக அறிவிக்காமல் உள்ளது. யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் திமுக, NDA, தவெக என மூன்று பக்கமும் கூட்டணி ஆப்ஷனை ஓபன் செய்து வைத்திருந்த தேமுதிக தற்போது ரேசில் பின்தங்கியுள்ளது. ராஜ்ய சபா சீட்டை அதிமுக கை விரித்தது முதல், திமுகவிடம் கட்சி நெருக்கம் காட்ட தொடங்கியது. அதிக ஆப்ஷனையும் க்ளோஸ் செய்யாமல் சீட் பேரத்தை கூட்ட தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கும் கதவை திறந்து வைத்தது. தற்போது NDA+ விஜய் கூட்டணி அனுமானங்கள், தேமுதிகவின் பேர வலிமைக்கு செக்காக மாறியுள்ளது.