2026 தேர்தல் கூட்டணி… ஒரே போடாய் போட்ட பிரேமலதா விஜயகாந்த்… சற்றுமுன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

By Nanthini on கார்த்திகை 27, 2025

Spread the love

SIR மூலம் வட மாநிலத்தவருக்கு இங்கு வாக்குரிமை அளித்தால் தமிழகத்தில் மக்கள் புரட்சி வெடிக்கும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நாங்கள் மக்களை சந்திக்க வந்தால் கொடி காட்டாது பேனர் வைக்காதே என்று கட்டுப்பாடு விதிப்பார்கள். கோவையில் ஆளும் கட்சியினர் கூட்டம் நடத்தினால் எந்த கட்டுப்பாடும் கிடையாது. இதையெல்லாம் கடந்து வந்தவர்கள் நாங்கள். SIR படிவத்தை அனைவரும் சரியாக பதிவு செய்ய வேண்டும். இதன் மூலமாக இங்கு உள்ள வட மாநிலத்தவருக்கு வாக்குரிமை அளிக்க முயற்சித்தால் தமிழகத்தில் மக்கள் புரட்சி வெடிக்கும்.

அடுத்த சட்டமன்ற தேர்தல் முடிவு கூட்டணி ஆட்சி அமையும் வகையில் இருக்கும் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார். தேர்தல் இன்னும் ஐந்து மாதங்களில் நடைபெற உள்ளதால் இதுவரை கூட்டணி குறித்து அறிவிப்பை பிரேமலதா வெளியிடாமல் உள்ள நிலையில் அவர் யாருடன் கூட்டணி அமைக்க போகிறார் என்பதை மிகப் பெரிய எதிர்பார்ப்பாகவே உள்ளது. ஏற்கனவே விஜய் ஆட்சியில் பங்கு என அறிவித்துள்ள நிலையில் இவர் விஜயுடன் கூட்டணி அமைப்பாரா அல்லது அதிமுக, திமுக கூட்டணியில் இணைவாரா என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.