வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலை பகுதியில் நடைபெற்ற நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடக்க விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு சிறப்பு திட்டம் முகாமை தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவரிடம், “பிரேமலதா , ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் முதலமைச்சரை சந்தித்தனர் . இது கூட்டணியாக மாற வாய்ப்பு இருக்கிறதா?
இதன் பின்னணியில் ஏதேனும் உள்ளதா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்கள். இதற்கு பதில் அளித்த துரைமுருகன் பின்னணியும் இல்லை. முன்னணியும் இல்லை. தலைவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அரசியல் பண்பாட்டோடு வந்து பார்த்தார்கள் அவ்வளவுதான்” என்று கூறியிருக்கிறார்.
