திடீர் டுவிஸ்ட்.! NDA கூட்டணியில் தேமுதிக..? கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த்..!!

By Soundarya on தை 21, 2026

Spread the love

தேமுதிக தொண்டர்கள் மிகவும் தெளிவாக இருப்பதாகவும், தங்களை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) வருமாறு இதுவரை யாரும் முறைப்படி அழைக்கவில்லை என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் இன்று   செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் எனத் தெளிவுபடுத்தினார்.

மேலும், மதுரையில் எல்.ஐ.சி பெண் மேலாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் விரைவாகச் செயல்பட்டு குற்றவாளியைக் கண்டுபிடித்த காவல்துறையினருக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். அதே வேளையில், தமிழகத்தில் சமீபகாலமாக கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகக் கவலை தெரிவித்த பிரேமலதா, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.