சற்றுமுன் திடீர் சந்திப்பு: அதிமுக கூட்டணியில் தேமுதிக…? தமிழக அரசியலில் திருப்பம்…!!

By Soundarya on கார்த்திகை 17, 2025

Spread the love

தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்கள் மட்டுமே உள்ளதால் இதுவரை தேமுதிக கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிடாமல் உள்ளது. சமீபத்தில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்த நிலையில், ஜனவரி மாதத்தில் கடலூர் மாநாடு நடைபெறும் சமயத்தில் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என பிரேமலதா அறிவித்திருந்தார். அதற்கு முன்பாக அல்லது அதன் பிறகு கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று சஸ்பென்ஸ் ஆக பிரேமலதா கூறியிருந்த நிலையில் இன்று மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்  தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவை சந்தித்து பேசி வருகிறார்.

அவருடன் தென் மாவட்ட அதிமுக முக்கியத் தலைவர்களும் இருக்கின்றனர். ஜனவரி மாதம் கடலூர் மாநாட்டில் அல்லது அதற்கு முன்பாக கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியிருந்தார். இந்த நிலையில் தான் இந்த திடீர் சந்திப்பு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.