தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. யார் யாருடன் கூட்டணி வைப்பது என்பதில் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர். இதனிடையே சென்னையில் நடைபெற்று வரும் ஜி கே மூப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சியில், NDA தலைவர்களுடன் ஒரே மேடையில் தேமுதிக பொருளாளர் எல்.கே சுதீஷ் பங்கேற்றுள்ளார்.
சமீபத்தில் ஜெயலலிதா உடன் பிரேமலதா இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அரசியலில் புயலை கிளப்பிய நிலையில், அதிமுக கூட்டணி தலைவர்களுடன் ஒன்றாக எல்கே சுதீஷ் அமர்ந்திருக்கிறார். இது அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைப்பதை கிட்டத்தட்ட உறுதி செய்வதாக அமைந்துள்ளது.
