உறவினர்களுக்கு 5 ஸ்டார் ஹோட்டலில் ராஜ விருந்து கொடுத்த அனிதா விஜயகுமார்.. வைரலாகும் புகைப்படங்கள்..

By Deepika

Updated on:

மகளின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தி முடித்த அனிதா விஜயகுமார் உறவினர்களுக்கு பைவ் ஸ்டார் ஹோட்டலில் விருந்து கொடுத்துள்ளார்.

Anitha vijayakumar wedding

விஜயகுமார் குடும்பத்தில் சினிமா பக்கமே தலைகாட்டாத ஒரே ஆள் என்றால் அவரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார் தான். பாரதிராஜா கேட்டும் கூட திரைப்படங்களில் படிக்காதவர் அனிதா. அப்படிப்பட்ட அனிதா மருத்துவம் படித்து டாக்டராக உள்ளார். இவர் தன்னுடன் மருத்துவம் பயின்ற கோகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகி விட்டார்.

   
Anitha vijayakumr daughter diya wedding

அனிதாவுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். இதில் மகள் தியாவும் டாக்டர் தான். லண்டனின் மருத்துவம் பயின்ற இவர், தன்னுடன் படித்த தில்லன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் கடந்த மாதம் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தொடங்கி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் வந்து மணமக்களை வாழ்த்தினர்.

Diya wedding lunch
Diya wedding lunch
Diya wedding lunch

இந்தநிலையில், தன் உறவினர்களுக்கு பைவ் ஸ்டார் ஹோட்டலில் பிரம்மாண்டமாக விருந்து கொடுத்துள்ளார் அனிதா விஜயகுமார். விஜயகுமார், அவரது மகள்கள் கவிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி அவர்களின் குடும்பத்தார். அருண்விஜய் அவரது மனைவி என ஒட்டுமொத்த குடும்பமும் இதில் கலந்து கொண்டனர்.

Diya wedding lunch
Diya wedding lunch
Diya wedding lunch

அந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார் அனிதா விஜயகுமார். தில்லனும், தியாவும் வெள்ளை நிறத்தில் ஜொலிக்கிறார். அவர்கள் மட்டுமல்ல மொத்த குடும்பமும் அழகான உடைகளை அணிந்து ராயலாக காட்சி கொடுத்தனர். தியா காதலுத்து திருமணம் செய்துள்ள தில்லன் குஜராத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Deepika