மக்களே ரெடியா?… இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு… மிஸ் பண்ணிடாதீங்க…!

By Nanthini on புரட்டாதி 17, 2025

Spread the love

தமிழகத்தில் தினம் தோறும் ஏராளமான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயில் பயணத்தை பெரும்பாலானோர் விரும்புகிறார்கள். காரணம் மிகக் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். அதேசமயம் முக்கிய பண்டிகை நாட்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக முன்னதாகவே ரயில் டிக்கெட் புக்கிங் செய்யப்படுகிறது.

அதன்படி ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளுக்கு சொந்த ஊர் செல்ல விரும்புவோர் செப்டம்பர் 17 இன்று காலை 8 மணிக்கு தயாராக இருக்க வேண்டும். ஏனென்றால் தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி சென்னையில் இருந்து மதுரை, செங்கோட்டை, நாகர்கோவில், நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதிகளுக்கு வருகின்ற அக்டோபர் 29 வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.