actress Trisha

திரிஷா போன்ற மனைவி எனக்கு வேண்டும்… பிக்பாஸ் பிரபலம் சொன்னதை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்!

By Elango on மாசி 13, 2026

Spread the love

விஜய் டிவியில் சீசன் 9 பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் திவாகர். ஏற்கனவே இவர் கஜினி படத்தில் சூர்யா ஒரு காட்சியில் தர்பூசணி சாப்பிடுவது போல நடித்துக் காட்டி தன்னை வாட்டர் மெலன் ஸ்டார் என பிரபலப்படுத்திக் கொண்டதும் கவனிக்கத்தக்கது.இந்நிலையில் வாட்டர்மெலன் திவாகர் கூறியதாவது, நான் பள்ளி காலத்தில் இருந்தே திரிஷா நடிப்பதை பார்த்து வருகிறேன்.

உண்மையில் நான் அவர்களை விட இளையவன். ஆனால் சமூக ஊடகங்களில் எனக்கு அதிக வயது என்று தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. சிவகார்த்திகேயனை விடவும் எனக்கு வயது குறைவுதான். திரிஷாவின் அலை படம் வெளியான போது நான் 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். திரிஷா போன்ற ஒரு வாழ்க்கை துணை கிடைக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை என்று கூறியிருக்கிறார்.