டிட்வா புயலைத் தொடர்ந்து தமிழக கடலோர மாவட்டங்களுக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். காலை 8.30 மணி நிலவரம் படி புயலானது சென்னையில் இருந்து 380 கிலோமீட்டர் தூரத்திலும், நாகையின் வேதாரண்யத்தில் இருந்து 140 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது புயல் வேதாரண்யத்தை நெருங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், நெல்லை, குமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று மணிக்கு 65 முதல் 75 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதேபோல கடலூர், மயிலாடுது, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 80 முதல் 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் பொதுமக்கள் தேவை இன்றி வெளியே செல்ல வேண்டாம் என்று அரசு எச்சரித்துள்ளது.
