தமிழ்நாடு முழுவதும் சாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை மற்றும் அரசால் வழங்கப்படும் முதன்மையான அடையாள அட்டைகள் இல்லாத மக்களுக்கு உதவிடும் வகையில், மாவட்ட நிர்வாகங்கள் சார்பாகத் தாலுகா வாரியாகச் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி, சமூக நீதித் துறையின் அறிவுறுத்தலின்படி தருமபுரி மாவட்டத்தில் பழங்குடியினர், நரிக்குறவர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் புதிரை வண்ணார் சமுதாய மக்களுக்கு நல வாரிய அட்டைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் முகாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இச்சிறப்பு முகாம்கள் தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், அரூர், பாலக்கோடு மற்றும் பென்னாகரம் ஆகிய வட்டங்களில் உள்ள முக்கியப் பள்ளிகள் மற்றும் சமுதாயக் கூடங்களில் ஜூலை 18, ஜூலை 25, ஆகஸ்ட் 01, ஆகஸ்ட் 08 மற்றும் ஆகஸ்ட் 16 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன.
இம்முகாம்கள் மூலமாகப் பழங்குடியின மற்றும் ஏழை எளிய மக்கள் இணையவழியில் தங்களுக்குத் தேவையான சான்றிதழ்களுக்கு நேரடியாக விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ள முடியும். சாதிச் சான்றிதழ், புதிய குடும்ப அட்டை, அரசின் அடையாள அட்டை மற்றும் நல வாரியச் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தங்களின் குடும்ப உறுப்பினர்களின் சான்றிதழ்கள், பள்ளி மாற்றுச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், புகைப்படங்கள் மற்றும் வாடகை அல்லது வீட்டு வரி ரசீது போன்ற தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும். தருமபுரி மாவட்ட மக்கள் தங்களுக்குரிய வட்டங்களில் நடைபெறும் நாட்களில் பங்கேற்றுப் பயனடையுமாறும், மற்ற மாவட்ட மக்கள் தங்களது பகுதியிலுள்ள தாலுகா அலுவலகங்களைத் தொடர்பு கொண்டு இச்சேவையைப் பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இந்தியாவிற்கும் தற்போதைய நவீன இந்தியாவிற்கும் இடையே…
பெங்களூருவில் உள்ள ஃபோரம் மாலில் அமைந்துள்ள பிவிஆர் ஐநாக்ஸ் மல்டிபிளெக்ஸில் இயங்கி வந்த ஜூஸ் கடை, பயன்படுத்தப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும்…
அமெரிக்க இடைக்காலத் (மிட் டேர்ம்) தேர்தலில் ஆளும் குடியரசு கட்சி அடைந்த பெரும் தோல்வி, அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அரசியல்…
உலகிலேயே மிகவும் விசித்திரமான மற்றும் சுவாரஸ்யமான நகரப் போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாக ஹாங்காங்கில் உள்ள 'சென்ட்ரல் மிட் லெவல்ஸ் எஸ்கலேட்டர்'…
தமிழகத்தில் அரசு ஆற்று மணல் குவாரிகளில் நடைபெற்ற மாபெரும் முறைகேடு தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள புதிய முதல் தகவல் அறிக்கையின்…
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா மற்றும் தவெக அரசை கடுமையாக விமர்சித்து…