அதிமுகவில் அடுத்த வெடி..! தவெகவின் கைக்கூலி சிவி சண்முகம்… ரகசியங்களை உடைத்த மாவட்ட செயலாளர் பசுபதி..!!

By Soundarya on ஆனி 14, 2026

Spread the love

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சித்ததைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் உட்கட்சி மோதல் வெடித்துள்ளதாக சொல்லப்படுகிறது . அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த சி.வி.சண்முகம், எடப்பாடி பழனிசாமியின் அரசியல் நகர்வுகளைத் தாக்கிப் பேசியதுடன், பாமக போன்ற கட்சிகளின் ஆதரவால்தான் அதிமுக சில தொகுதிகளிலாவது வென்றது எனப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தார். இந்த விமர்சனம் அதிமுக தலைமை மற்றும் அதன் தற்போதைய மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்வலையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ள விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளர் பசுபதி, சி.வி.சண்முகத்தைத் தமிழக வெற்றி கழகத்தின் “கைக்கூலி” என மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். தவெக தலைவர் விஜய் நேரில் வந்து சந்தித்தபோது, சலுகைகளுக்காக அவருக்கு சி.வி.சண்முகம் ஆதரவளித்ததாகக் குறிப்பிட்ட பசுபதி, தற்போது தவெகவில் அவருக்கு உரிய அங்கீகாரமும் மரியாதையும் கிடைக்காத காரணத்தினாலேயே, மீண்டும் அதிமுகவிற்குள் பொறுப்பைக் கேட்டு புதிய நாடகத்தை அரங்கேற்றுகிறார் என விமர்சித்துள்ளார்.