இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரேஷன் கார்டு என்பது முக்கியமான ஆவணமாக உள்ளது. ரேஷன் கார்டு வைத்துள்ள பயனாளிகளுக்கு அரசு சார்பில் ஏராளமான நிதி உதவிகள் வழங்கப்படுவது மட்டுமல்லாமல் அத்தியாவசிய பொருள்களும் ரேஷன் கடைகள் மூலமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகிறார்கள். இப்படியான நிலையில் குறைந்த விலையில் ரேஷன் பொருட்கள் வழங்குவது குறித்து மத்திய அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது.
ஒரு குடும்பத்திற்கு 15 கிலோ கோதுமை, 20 கிலோ அரிசி மட்டுமே இனி கிடைக்கும். ஒரு கிலோ கோதுமைக்கு 2 ரூபாய் மற்றும் ஒரு கிலோ அரிசிக்கு 3 ரூபாய் என்ற விகிதத்தில் வழங்கப்படும். இந்த முடிவு APL (வறுமை கோட்டுக்கு மேல்) குடும்பங்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ரேஷன் கார்டுகள் மத்திய அரசால் வழங்கப்படுவதால் அந்தந்த அரசுகள் மக்களுக்கு ஏற்ற வகையில் திட்டங்களை செயல்படுத்தலாம்.
