“இப்படி பண்ணிட்டியே மா…?” டெட் தேர்வில் தோல்வி… திருமணமான 50 நாட்களில் சோகம்… மனமுடைந்து இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

By Devi Ramu on ஆவணி 21, 2026

Spread the love

ஆந்திரப் மாநிலம் விஜயநகரம் மாவட்டம் தத்திராஜேரு மண்டலம் சினராஜேரு கிராமத்தைச் சேர்ந்த தனுஜா (22) என்ற இளம்பெண், சமீபத்தில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தோல்வியடைந்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார்.

திருணமாகி வெறும் 50 நாட்களே ஆன நிலையில், தேர்வு முடிவுகளால் மனவேதனையடைந்த புதுப்பெண் தனுஜா இந்த முடிவை எடுத்துள்ளது அவரது குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகப் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பெதமனாபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.