கையெழுத்தால் வந்த வினை…! “சேலையை பிடித்து இழுத்து….” அஞ்சல் ஊழியரை மரத்தில் கட்டி வைத்த வாலிபர்….? போலீஸ் விசாரணை…!!

By Devi Ramu on ஐப்பசி 29, 2025

Spread the love

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சேதுக்கரை பகுதியில் கிளை அஞ்சல் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு கடந்த மூன்று ஆண்டுகளாக ஜோலார்பேட்டை சேர்ந்த லோகேஷ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் பொன்னம்பட்டி பகுதியைச் சேர்ந்த அஜய் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஸ்போர்ட் விண்ணப்பித்திருந்தார். அந்த பாஸ்போர்ட் புக் உடன் வெரிஃபிகேஷனுக்காக அஞ்சல் ஊழியர் லோகேஷ் அஜய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

ஆதார் மற்றும் பான் கார்டுகளை ஆய்வு செய்து அவரிடம் படிவத்தில் லோகேஷ் கையெழுத்து வாங்கியுள்ளார். அப்போது அஜய் ஒவ்வொரு படிவத்திலும் வெவ்வேறு விதமாக கையெழுத்து போட்டதாக தெரிகிறது. உடனே லோகேஷ் மாறி மாறி கையெழுத்து போட்டால் படிவத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

   

நீங்கள் அலுவலகத்திற்கு நேரில் சென்று பாஸ்போர்ட்டை பெற்றுக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து அறிந்த போலீசார் லோகேஷிடம் கேட்டபோது அஜய் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்னை தாக்கி எனது கையை பிடித்து எனது வாயில் மதுவை ஊற்றி மரத்தில் கட்டி வைத்தனர் என கூறியுள்ளார்.

   

அஜய்யிடம் கேட்டபோது அஞ்சல் ஊழியர் மதுபோதையில் வந்து தகாத வார்த்தையில் பேசினார். எனது தாயின் துணியைப் பிடித்து இழுத்தார் என கூறியுள்ளார். இதில் யார் கூறுவது உண்மை என்பது தெரியவில்லை. இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.