“Wi-Fi கனெக்ஷன் கொடுக்க வந்த இடத்தில் இப்படியா…? பெண்களையும் விட்டு வைக்கல…. தடியால் அடித்து கொண்டதில் 8 பேர் படுகாயம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

By Devi Ramu on புரட்டாதி 19, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் சித்தார்தநகர் பகுதியில், பக்கத்து வீடுகளுக்கு இடையே வைஃபை இன்டர்நெட் இணைப்பு அமைப்பது மற்றும் கீழே விழுந்து கிடந்த மரக்கட்டைகளை எடுப்பது தொடர்பாகத் திடீரென காரசாரமான வாக்குவாதம் வெடித்தது.

சிறிய அளவில் தொடங்கிய இந்த மோதல், நொடிப் பொழுதில் கட்டுப்பாட்டை இழந்து இரு தரப்பினரும் தடிமனான தடிகள் மற்றும் கம்புகளைக் கொண்டு மாறி மாறித் தாக்கும் பயங்கரப் போர்க்களமாக மாறியது. இந்த ஆக்ரோஷமான தாக்குதலில் பெண்கள் என்றும் பாராமல் அனைவரையும் சரமாரியாகத் தாக்கியதில், இரு தரப்பையும் சேர்ந்த 8 பேர் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தனர்.

   

வைஃபை இணைப்பு கொடுக்க வந்த இடத்தில் அரங்கேறிய இந்த ரத்தக் களறியான சண்டை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.