ஆட்டம் காணும் மருத்துவ உலகம்.. 60 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக கண்டறியப்பட்ட பயங்கர நோய்.. அதுவும் எங்கு தெரியுமா..?

By Nanthini on புரட்டாதி 7, 2024

Spread the love

உலகம் முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா வைரஸ் மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வைரஸ் பாதிப்பு சற்று குறைவதற்கே இரண்டு வருடங்களுக்கு மேலானது. அதனைத் தொடர்ந்து மலேரியா, டெங்கு மற்றும் குரங்கு அம்மை நோய் என அடுத்தடுத்து பல வைரஸ் பாதிப்புகள் மக்களை அச்சுறுத்தியது. இந்த நிலையில் கனேடிய மாகாணம் ஒன்றில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக மனிதர்களில் பயங்கர நோயான ரேபிஸ் கண்டறியப்பட்டுள்ள விஷயம் மருத்துவ உலகை பரபரப்படைய செய்துள்ளது.

   

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் ஒருவர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். வவ்வாலிடமிருந்து அவருக்கு இந்த நோய் பரவியதாக கூறப்படுகிறது. ஒருவருக்கு ரேபிஸ் நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது தொடர்ந்து யாராவது இந்த வைரஸை தன் உடலில் சுமக்கக்கூடிய எந்த விலங்கையாவது தொட்டிருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரேபிஸ் வைரஸை தன்னுடைய உடலில் சுமக்கக்கூடிய விலங்குகளின் எச்சில் போன்றவை மனிதர்கள் மேல் படும்போது அதிலிருந்து ரேபிஸ் வைரஸ் மனிதர்களுக்கு பரவும் எனக் கூறப்படுகிறது.

   

 

மூளையையும் தண்டுவடத்தையும் இந்த வைரஸ் பாதிக்கும். இருந்தாலும் உரிய நேரத்தில் முறையான சிகிச்சை அளித்தால் இந்த வைரஸ் தொற்றை கிட்டத்தட்ட 100% குணமாக்கி விட முடியும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் இந்த ரேபிஸ் தொற்று ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதருக்கு பரவியதாக இதுவரை எந்த ஆவணமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.