1990-ஆம் ஆண்டு ரிலீசான புது வசந்தம் படம் மூலம் இயக்குனராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தவர் விக்ரமன். அந்த படத்தின் வெற்றியை அடுத்து அவர் அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்து 90 களில் முன்னணி இயக்குனராக வலம் வந்தார். அதன் பின்னர் அவர் இயக்கிய நான் பேச நினைப்பதெல்லாம், கோகுலம், சூர்யவம்சம், பூவே உனக்காக, வானத்தைப் போல போன்ற சூப்பர் ஹிட் ஆகி வசூல் மழை பொழிந்தன. ஆனால் 2000 களுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் ட்ரண்ட் மாற அவரின் மெலோ டிராமா கதைகள் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை.

அதனால் கடைசியாக அவர் இயக்கிய படமாக மரியாதை படம் அமைந்தது. அந்த படம் படுதோல்வி படமாக அமைந்தது. அதன் பிறகு அவர் வேறு எந்த படத்தையும் இயக்கவில்லை. அதனால் இப்போது சினிமாவில் இருந்து விலகி இடைவெளி எடுத்துக் கொண்டு அவரது மகனைக் கதாநாயகனாக்கியுள்ளார். விக்ரமன் படங்களின் பார்முலா என்னவென்று கூர்ந்து பார்த்தால் ஒரு எமோஷனலான கதைக்களம், அதைச் சுற்று நகைச்சுவை கதாபாத்திரங்கள் என நகர்த்திக் கொண்டே சென்று எமோஷனலாகக் கதையை முடிப்பார்.

அந்தவகையில் புது வசந்தம் படமும் அப்படிதான் இருக்கும். இந்த படத்தில் நான்கு ஆண்களுக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையில் இருக்கும் கலங்கம் இல்லாத நட்பும் நேசமும் மட்டுமே. படம் முழுவதும் மலர்ந்த இந்த உறவை கிளைமாக்ஸ் இன்னமும் அழுத்தமாக ஆணி அடித்தது போல் சொன்னது தான் இந்த படத்தின் வெற்றிக்கு காரணமாகவே அமைந்தது. இறுதி வரைக்கும் அவர்களை நண்பர்களாக மட்டும் பார்த்தது நன்றாக இருக்கும். இந்த படம் இன்றளவும் நினைவு கூறப்படுவதற்கு காரணம். அதன் புத்துணர்ச்சியான கிளைமாக்ஸ் காட்சிதான்.
![]()
இந்த நிலையில் இந்த கிளைமாக்ஸ் குறித்து பேட்டி ஒன்றில் இயக்குனர் விக்ரமன் கூறியுள்ளார். அதாவது, ” புதுவசந்தம் படத்துல சந்தேகப்பட்ட காதலனை விட நம்புற நண்பர்களே பெஸ்ட் என்பது தான் கிளைமேக்ஸ். அப்படி தான் இருந்தது. ஆனால் பட ஷூட்டிங்க்லேயே எனக்கு வித்தியாசமா தோணுச்சு. அப்போ தான் இவங்க வாழ்க்கை என்னாச்சு என்று யோசிக்கும் ரசிகர்களுக்கு ஒரு satisfaction கொடுக்க வேண்டும் என்பதற்காக பாதி படம் நடந்திட்டிருக்கும்போது தான் அவங்க நாலு பேரும் மியூசிக் டைரக்டர் ஆகிட்டாங்க. சித்தாராவும் அதுல ஒரு பார்ட் ஆகிட்டா என்பது தான் கிளைமேக்ஸ் என்று சௌத்ரியிடம் சொன்னேன். அவரும் ஒத்துக்கொண்டார்” என்று கூறியுள்ளார்.
