உன்னை நினைத்து படத்தால் என்னோட மொத்த பெயரும் போயிருச்சு.. புலம்பும் தயாரிப்பாளர் விக்ரமன்..!

By Nanthini on பங்குனி 3, 2025

Spread the love

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான விக்ரமன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் உன்னை நினைத்து. இந்த திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து சினேகா, லைலா மற்றும் ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பூவே உனக்காக, சூரியவம்சம் மற்றும் வானத்தைப்போல என மெகா படங்களை கொடுத்த இயக்குனர் விக்ரமன் அடுத்ததாக மீண்டும் விஜயுடன் இணைய இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அந்தப் படம் தான் உன்னை நினைத்து. விஜயை வைத்து சில நாட்கள் படபிடிப்போம் நடத்தப்பட்ட நிலையில் கதையின் கிளைமாக்ஸ்சில் விஜய்க்கு கடைசி வரை உடன்பாடு இல்லாததால் விஜய் படத்திலிருந்து விலகவே சூர்யாவை விக்ரமணா படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்தார்.

21 Years Of Unnai Ninaithu: விஜய் போட்ட தப்பு கணக்கு.. சூர்யாவுக்கு கை  கொடுத்த உன்னை நினைத்து!

   

இவ்வாறு உருவானது தான் உன்னை நினைத்து திரைப்படம். 2002 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இன்றுவரை படம் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படமாக உள்ளது. என் நிலையில் உன்னை நினைத்து திரைப்படம் குறித்து இயக்குனர் விக்ரமன் சமீபத்தில் அளித்த பேட்டியில், சூர்யாவின் உன்னை நினைத்து திரைப்படத்தின் உரிமையை வேலூரை சேர்ந்த பிரபலம் ஒருவர் தயாரிப்பாளரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அந்த நபர் செல்வதற்கு முன்பு இந்த படத்தை கன்னட ரீமேக்கில் எடுத்து சூப்பர் ஹிட் கொடுத்துக் காட்டுகிறேன் என்று சவால் விட்டு சென்றுள்ளார்.

   

Krishna (2007) Movie | Watch Online | Movie Streaming & Database | DJ  Talkies

 

சில நாட்கள் கழித்து எனக்கு பெங்களூரில் இருந்து தொடர்ந்து போன் கால் வந்தது. என்ன என்று விசாரித்தால் உன்னை நினைத்து திரைப்படத்தின் ரீமேக்கை அப்படியே கன்னடத்தில் அதே கதையை வைத்து எடுத்திருப்பதாக சொன்னார்கள். உடனே பதறிப் போய் பெங்களூருக்கு புறப்பட்டுச் சென்று அங்கு தெரிந்த நண்பருக்கு போன் செய்து அழைத்து டிக்கெட் வாங்கி தர சொன்னேன். டிக்கெட் வாங்கிட்டு தியேட்டருக்கு போய் படம் பார்த்தால் முதல் பாதி எதுவுமே புரியல, ஏனென்றால் உன்னை நினைத்து படத்திற்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதன் பிறகு இரண்டாம் பாதியை பார்த்தால் அப்படியே அனைத்து கதையும் உன்னை நினைத்து கதையைப் போலவே இருந்தது. கடைசியாக ஹீரோயினியை ரயிலில் ஏற்றி அனுப்பும் காட்சி வரை அனைத்துமே அப்படியே இடம் பெற்று இருந்தது.

உன்னை நினைத்து 2ம் பாகம் எடுக்க போறேன்.. அதில் ஹீரோ இவர் தான்..! இயக்குனர்  விக்ரமன் | Director Vikraman planning to take Unnai ninaithu 2

அந்தப் படத்தில் நடித்த கிருஷ்ணா என்ற ஹீரோ சிவகார்த்திகேயன் போல ஒரு மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதன் பிறகு ஹீரோவாக நடிக்க வந்துள்ளார். எனக்கு அதைப் பார்த்து ரொம்ப ஷாக் ஆயிருச்சு. உடனே அங்க கம்ப்ளைன்ட் பைல் பண்ணிட்டு நான் வந்துட்டேன். பிறகு எல்லோரும் சமரசம் பேசிய பிறகு ஒரு சொற்பத்தொகையை எனக்கு வாங்கி கொடுத்தாங்க. அத பாத்ததும் அன்னைக்கே அந்த நபர் கேட்டப்ப படத்தின் உரிமையை கொடுத்திருந்தார் இன்னிக்கி இவ்வளவு அலுப்ப காசுக்கு வந்து நின்னுருக்க வேண்டாம் என்ற தோனுச்சு. தயாரிப்பாளர் அன்னைக்கு செஞ்ச தப்பால் என்னுடைய மொத்த பேரும் போயிருச்சு என்று விக்ரமன் புலம்பியுள்ளார்.