வானத்தைப்போல படபிடிப்பில் பழம்பெறும் நடிகை SN லட்சுமி செய்த செயல்.. கையெடுத்து கும்பிட்ட இயக்குனர் விக்ரமன்.. அப்படி என்ன நடந்தது..?

By Nanthini on பங்குனி 30, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் ரத்தம், அதிரடி சண்டை காட்சிகள் மற்றும் வன்முறை போன்ற விஷயங்கள் எதுவும் இல்லாமல் மென்மையான திரைப்படங்களை இயக்கக் கூடியவர் தான் இயக்குனர் விக்ரமன். இவர் இயக்கிய முதல் திரைப்படம் புதுவசந்தம். இந்தப் படத்தில் முரளி, சார்லி, ஆனந்த் பாபு மற்றும் சித்தாரா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். திருமணமாகாத நான்கு ஆண்களுடன் ஒரு பெண் நட்பாக பழக முடியும் அவர்களோடு ஒரே வீட்டில் தங்கி இருக்க முடியும் என்று நாகரிகமான கதையை அமைத்து படத்தை உருவாக்கி இருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

விக்ரமனிடம் இருந்த அசாத்தியமான திறமை!… உதவி இயக்குனரா சேரும்போதே இப்படியா? - CineReporters

   

இதனைத் தொடர்ந்து புதிய மன்னர்கள், கோகுலம், நான் பேச நினைப்பதெல்லாம், பூவே உனக்காக, சூரியவம்சம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வானத்தைப்போல, உன்னை நினைத்து மற்றும் பிரியமான தோழி என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார். இதில் விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக திரைப்படம் தான் விஜயின் சினிமா கேரியரை திருப்பி போட்டது. சரத்குமாரை வைத்து இயக்கிய சூரியவம்சம் தமிழ் சினிமாவில் இதுவரை மிகவும் அதிக பேர் பார்த்த திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. அதனைப் போலவே விஜயகாந்துக்கும் வானத்தைப்போல என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்திருந்தார். விக்ரமன் எப்போதுமே வெளிப்படையாக பேசும் பழக்கம் கொண்டவர்.

   

SN Lakshmi Birth To Death | எஸ் என் லட்சுமி

 

மனதில் ஒன்று வெளியே ஒன்று என பேசும் பழக்கம் அவருக்கு கிடையாது. ஒரு கட்டத்தில் விக்ரமன் சொல்வது சரி என்பதை புரிந்து கொண்டு நடிகர்கள் பலரும் இவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து விடுவார்கள். இப்படியான நிலையில்  விக்ரமன் சமீபத்தில் அளித்த பேட்டியில் பிரபல பழம்பெறும் நடிகை எஸ் என் லட்சுமி பற்றி பெருமையாக பேசியுள்ளார். அதில், எம்ஜிஆர் மற்றும் சிவாஜி காலகட்டத்தில் அவர்களுக்கு அம்மாவாக நடித்த பழம்பெறும் நடிகை எஸ் என் லட்சுமி நான் இயக்கிய வானத்தைப்போல திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்போது படப்பிடிப்பு நடைபெறும் சமயத்தில் நான் சென்றாலே அவங்க எழுந்து நிப்பாங்க. உடனே நான் கையெடுத்து கும்பிட்டு அம்மா தயவு செய்து உட்காருங்கள் உங்களுடைய வயசு என்ன என்னுடைய வயசு என்ன ,உங்களுடைய அனுபவம் என்ன என்னுடைய அனுபவம் என்ன அமருங்கள் என்று சொல்வேன்.

உடனே அவங்க அதெல்லாம் கிடையாது நாங்க நடிக்கிற படத்துல டைரக்டர் வந்தாலே எழுந்து நிக்கணும் அவ்வளவுதான் என்று சொல்வார்கள். ஒரு நாள் அப்படி தான் மதியம் மிஞ்சிப்போன பழைய சாப்பாட்ட கேரியரில் வைத்து நைட் சாப்பிட அந்த அம்மாவுக்கு கொடுத்துட்டாங்க. பாவம் அந்த வயசான அம்மா என்ன பண்றதுன்னு தெரியாம என்னிடம் மேனேஜரா இருந்தா பாவா லட்சுமணன் கிட்ட இந்த விஷயத்தை சொல்லி இருக்காங்க. அப்பவும் எங்கிட்ட அவங்க சொல்லு கிடையாது. அந்த அளவுக்கு அவங்களுக்கு தொழில் பக்தி அதிகமா இருந்துச்சு. பழைய நடிகர்கள் என்றாலே தொழில் பக்தி மற்றும் இயக்குனர்களுக்கு கொடுக்கக்கூடிய மரியாதை என அனைத்திலும் சிறந்ததாக இருந்தார்கள். இன்றைய காலத்தில் அப்படி கிடையாது என விக்ரமன் பேசியுள்ளார்.