Categories: CINEMA

அதிக படங்கள் இயக்கி கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த பெண் இயக்குனர்.. விஜய நிர்மலா பற்றி பலரும் அறியாத தகவல்..

இண்டிய சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது.  தென்னிந்திய சினிமாவில் சாவித்ரி, சுஹாசினி, ரேவதி மற்றும் தற்போதைய சுதா கொங்கரா வரை பல பெண்கலைஞர்கள் சாதித்திருந்தாலும் அவர்களின் பங்களிப்பு இன்னும் குறிப்பிடத்தக்க அளவுக்கு இல்லை. இந்நிலையில் உலகளவில் இயக்குனராக சாதனை படைத்த இயக்குனர் விஜய நிர்மலா பற்றிதான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகை விஜய நிர்மலா.  குழந்தை நட்சத்திரமாக மட்ச ரேகை என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். 1964 ஆம் ஆண்டு வெளியான பார்கவி நிலையம் என்ற மலையாள திரைப்படம் மூலமாக இவர் கதாநாயகியாக அறிமுகமானார்.

#

இவர் நடித்த படங்களிலேயே பணமா பாசமா இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இன்றளவும் கேட்டு ரசிக்கப்படும்  எலந்த பயம் பாடலில் தோன்றியது இவர்தான். சிவாஜி கணேசனோடு பல படங்களில் கதாநாயகியாகவும் துணை நட்சத்திரமாகவும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் சூப்பர்ஸ்ராராக விளங்கிய நடிகர் கிருஷ்ணாவைக் காதல் திருமணம் செய்துகொண்டார்.

நடிகையாக பிஸியாக இருந்த போதே இவருக்கு இயக்கத்தில் ஆசை வரவே இயக்குனர் ஆனார்.  1973 ஆம் ஆண்டு தெலுங்கில் மீனா என்ற படத்த இயக்கி இயக்குனராக அறிமுகமானார். இவர் இயக்கியதில் பெரும்பாலும் தெலுங்கு மற்றும் மலையாள படங்கள்தான். 1983-ஆம் ஆண்டு இயக்கிய பெஸவாடா பெப்புலி தெலுங்குப் படத்தில் சிவாஜி நடித்திருந்தார்.  ஒட்டுமொத்தமாக தன்னுடைய சினிமா கேரியரில் 44 படங்களை இயக்கியுள்ளார்.

இதன் மூலம் உலகிலேயே அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குனர் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார்.  கடைசியாக 2009 ஆம் ஆண்டு நேரமு சிக்‌ஷா என்ற படத்தை இயக்கினார். இவர் இயக்கியதில் பல படங்கள் வசூல் ரீதியாக பெற்றுள்ளன.

இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு தன்னுடைய 73 ஆவது வயதில் காலமானார். இவரின் மகன் நரேஷ் தெலுங்கில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.

vinoth

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

7 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

8 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

8 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

9 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

9 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

9 மணி நேரங்கள் ago