இயக்குனர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாள் கொண்டாட்டம்…. வெளியான ரொமான்ஸ் புகைப்படங்கள்… உள்ளே…

By Begam on புரட்டாதி 18, 2022

Spread the love

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது மனைவி நயன்தாராவுடன் இன்று துபாயில் தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.  தற்பொழுது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

2015 வெளியான ‘நானும் ரவுடிதான்’ படத்தின் போது இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையில் ஏற்பட்ட நட்பு பின்னாளில் காதலாக மாறியது. இருவரும் நெருங்கி பழகி வரும் நிலையில் திருமணம் எப்போது என்ற கேள்வி சில ஆண்டுகளாக இருவரிடம் கேட்கப்பட்டு வந்தது.

   

   

இதற்கு பதில் அளிக்கும் விதமாக அவர்கள் கடந்த ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பின்னர் இவர்கள் வெளியிடும் ரொமான்ஸ் புகைப்படங்கள் தான் சமூக வலைத்தளங்களில் ஹாட் டாபிக். இந்த வகையில் இன்று தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் இயக்குனர் விக்னேஷ் சிவன் துபாயில் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.

 

தற்பொழுது அந்த புகைப்படங்களை தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.