என்னை ஒரு ‘மொக்கை பீஸ்’ அப்படினு எல்லாரும் நினைச்சாங்க… வருத்தத்துடன் பேசிய இயக்குனர் விக்னேஷ் சிவன்

By Soundarya on சித்திரை 8, 2026

Spread the love

தமிழ் திரையுலகில் ‘போடா போடி’, ‘நானும் ரவுடி தான்’ போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகர் அஜித்தை வைத்து ஒரு படத்தை இயக்கவிருந்தார். அதற்கான ஆரம்பகட்டப் பணிகள் முடிந்து படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே, எதிர்பாராத விதமாக விக்னேஷ் சிவன் அந்தப் படத்திலிருந்து நீக்கப்பட்டார். இந்த விவகாரம் அப்போது திரைத்துறையில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இந்நிலையில், தனது புதிய படமான ‘லைக்கன்’ (LICA) படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், அந்தச் சமயத்தில் தான் அனுபவித்த வேதனைகள் குறித்து உருக்கமாகப் பேசினார்.

“ஒரு பெரிய படம் எனக்குத் தொடங்குவது போல் இருந்து, ஆரம்பிக்காமலேயே நின்றது எனக்குப் பெரும் வருத்தத்தைத் தந்தது; அந்தத் தருணம் ஒரு திருமணத்தின் முந்தைய நாள் மணப்பெண் ஓடிப்போனது போன்ற மனநிலையை எனக்குக் கொடுத்தது” என்று அவர் வருத்தத்துடன் பகிர்ந்துகொண்டார். மேலும், அந்தச் சூழலில் பலர் தன்னை ஒரு ‘மொக்கை பீஸ்’ என ஏளனமாக நினைத்ததாகவும், அந்த அவமானங்களைச் சுமந்து கொண்டுதான் மீண்டும் அடுத்த பயணத்தைத் தொடங்கியதாகவும் விக்னேஷ் சிவன் மிகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.