என்னிடம் வேலை செய்ற இயக்குனர்கள் எந்த கதை சொன்னாலும் என் பதில் இதுதான்.. எங்கிட்ட கதை சொல்றது ரொம்ப கஷ்டம்.. இயக்குனர் வெற்றிமாறன் பளீச்..!

By Nanthini on தை 27, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் வெற்றிமாறன். இவருடைய இயக்கத்தில் அண்மையில் வெளியான விடுதலை 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் இந்த படத்தில் சூர்யா நாயகனாக நடிக்கிறார். இப்படியான நிலையில் வெற்றிமாறன் உதவி இயக்குனர் வர்ஷா பரத் இயக்கியுள்ள பேட் கேர்ள் திரைப்படத்தை வெற்றிமாறனின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று பேட் கேர்ள் திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.

I have smoked up to 180 cigarettes a day"- Director Vetrimaran | "ஒரு  நாளைக்கு 180 சிகரெட் வரை பிடித்துள்ளேன்"- இயக்குநர் வெற்றிமாறன்

   

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய வெற்றிமாறன், எப்போதுமே என் கூட வேலை செய்றவங்க இந்த ஐடியா இருக்கு, அந்த ஐடியா இருக்குன்னு சொல்லிட்டு இருப்பாங்க. நான் ஒரு கடுமையான விமர்சகர். கதை நல்லா இருக்கு, ஆனா படமா வராது, கதை வெர்க் ஆகலன்னு நிறைய சொல்லுவேன். எங்கிட்ட ஒருத்தர் வந்து கதை சொல்ல வேண்டும் என்றால் நிறைய தைரியம் தேவை. எல்லாத்தையும் மீறி சொன்னாலும் நான் நல்லா இல்லன்னு தான் பெரும்பாலும் சொல்லுவேன். எடுத்த உடனேயே நல்லா இல்லை என்று சொல்லவில்லை என்றாலும் கொஞ்ச நாள் கழிச்சு ஆவது சொல்லிடுவேன்.

   

வெற்றிமாறன்

 

வர்ஷா என்கிட்ட ரெண்டு மூணு ஐடியா சொல்லிட்டு இந்த ஐடியாவை வந்து சொல்லும்போதே , இத நாங்க செட் பண்ணிட்டோம். அமேசான் இதை பண்றாங்க. ஆனா அவங்க ஒரு புரொடக்ஷன் ஹவுஸ் மட்டும் கேக்குறாங்கன்னு சொன்னாங்க. அதனால இந்த படத்துல கடைசியா வந்து சேர்ந்தது நான்தான். சில மாற்றங்களால் அமேசான் இந்த படத்தை பண்ணல. அந்த சமயத்துல அனுராக் சென்னை வந்திருந்தார். அப்போ ரெண்டு பேரும் சேர்ந்து செய்யலாம் என்று இந்த படம் தொடங்கியது. பிறகு அவருக்கு வேற வேலை வந்ததால நாங்க கடைசியா பண்ணனும். இந்த படத்துல என்னோட கிரியேட்டிவ் பங்களிப்பு ரொம்ப கம்மி தான். ஆர்டிஸ்ட் பரிந்துரை மாதிரியான விஷயங்கள் மட்டும் தான் நான் பண்ண வேண்டியதாக இருந்தது என்று வெற்றிமாறன் பேசியுள்ளார்.