ஹரிஷ் கல்யாண் “டீசல்” படத்தில் வெற்றிமாறனின் புதிய அவதாரம்.. அட இதை யாருமே எதிர்பார்க்கலையே..!

By Nanthini on ஏப்ரல் 3, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் வெற்றிமாறன். சமீபகாலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான விடுதலை 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் விமர்சகர்கள் மத்தியில் அந்த திரைப்படத்தில் பேசப்பட்ட வசனங்கள் அரசியலை ஆதரிப்பவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. விடுதலை 2 திரைப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் வாடிவாசல் திரைப்படத்தை இயக்க உள்ளார்.

பள்ளி, கல்லூரிகளில் சாதி சான்றிதழ் கேட்பதை கண்டிப்பாக நிறுத்த வேண்டும்  -இயக்குனர் வெற்றிமாறன் | Tamil cinema director vetrimaran speech goes viral

   

சூர்யாவை வைத்து இந்த திரைப்படத்தை அவர் இயக்க உள்ள நிலையில் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியான நிலையில் வெற்றிமாறன் ஹரிஷ் கல்யாண் நடித்த திரைப்படம் ஒன்றில் பணியாற்றியுள்ளது குறித்த தகவல் வெளியாக்கியுள்ளது. சண்முக முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள திரைப்படம் தான் டீசல். இந்த திரைப்படத்தின் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்துள்ளார்.

   

ஹரிஷ் கல்யாண் படத்தில் வெற்றிமாறனின் இன்னொரு அவதாரம்? வேற லெவல்ல  இருக்கப்போது… - Update News 360 | Tamil News Online

 

இந்த திரைப்படம் படமாக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் இந்த திரைப்படம் வெளியாகாமல் இருந்த நிலையில் சமீப நாட்களாக இந்த திரைப்படத்தை விரைவில் வெளியிடுவதற்கான தீவிர முயற்சியில் பட குழு ஈடுபட்டு வருகின்றது. இப்படியான நிலையில் இந்த திரைப்படத்தை சமீபத்தில் வெற்றிமாறனுக்கு பட குழு திரையிட்டு காட்டிய போது படத்தை பார்த்துவிட்டு பட குழுவினரை வெற்றிமாறன் பாராட்டியதாக கூறப்பட்டது. இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் டீசல் திரைப்படத்தில் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளாராம். அது குறித்த செய்தி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.