6 வருஷம் அவங்க தான் எனக்கு சோறு போட்டாங்க.. என் மனைவி இல்லனா சினிமாவை விட்டே போயிருப்பேன்.. லப்பர் பந்து இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து உருக்கம்..!

By Nanthini on மாசி 5, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர்தான் தமிழரசன் பச்சமுத்து. கனா மட்டும் எஃப் ஐ ஆர் ஆகிய படங்களில் இணை இயக்குனராகவும், நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திற்கு வசனமும் எழுதி உள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற லப்பர் பந்து திரைப்படத்தில்தான் தமிழரசன் பச்சமுத்து இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டக்கத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடித்திருந்தனர்.

Lubber Pandhu Exclusive: ``கெத்து கதாபாத்திரத்துக்கு இன்ஸ்பிரேஷன் இவர்தான்"- இயக்குநர் பேட்டி| lubber pandhu movie director tamilarasan pachamuthu interview - Vikatan

   

இதில் தினேஷ் கெத்து கதாபாத்திரத்தில் நடித்த நிலையில் ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டைப் பெற்றார். கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு வெளியான இந்த திரைப்படத்தை ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரை பிரபலங்கள் பலரும் வெகுவாக பாராட்டினர். தனது முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியை பதிவு செய்த இவருக்கு தொடர்ந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

   

பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உடன் ஒப்பீடு - 'லப்பர் பந்து' இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து ஓபன் டாக் | pa ranjith and mari selvaraj movies compared with lubber pandhu movie by ...

 

இப்படியான நிலையில் தமிழரசன் பச்சமுத்து சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டேன். நான் படம் பண்ற வரைக்கும் சினிமாவை விட்டு போயிடக் கூடாது என்பதற்காக ஆறு வருஷமா என் மனைவி வேலைக்கு போய் எல்லா செலவையும் பார்த்துக்கிட்டாங்க. எனக்கு சாப்பாடு போட்டு எனக்கு டிரஸ் எடுத்து கொடுத்து அவங்க தான் பாத்துக்கிட்டாங்க.

லப்பர் பந்து வெற்றி - இயக்குநருக்குக் கைமேல் கிடைத்த பலன்

காசு இல்லாவிட்டால் நம்பிக்கையை குறைந்து விடும், பாதுகாப்பு இல்லாத மாதிரி பீல் பண்ணுவோம், இது நமக்கு வொர்க் ஆகாதுன்னு தோன்றிடும் என்பதற்காக எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணாங்க. உன்னோட வாழ்க்கையில எப்ப அவங்க வந்தாங்களோ அப்பாவே வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போய்ட்டாங்க. என்னோட மனைவி என் வாழ்க்கையில ஒரு மாதத்திற்கு பின்பு வந்திருந்தால் நான் சினிமாவை விட்டு போய் இருப்பேன். என்னை இந்த இடத்திற்கு கொண்டுவந்து நிறுத்தி உள்ள என் மனைவி காயத்ரிக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன் என்று தமிழரசன் பச்சமுத்து உருக்கமாக பேசியுள்ளார்.