நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்ற படம் டாணாக்காரன். இந்த படத்தை இயக்கியவர் தமிழ். இவர் ஜெய்பீம் அசுரன் விடுதலை 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்தும் இருக்கிறார். சமீபத்தில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற சிறை படத்தின் கதை ஆசிரியர் தமிழ் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற டாணாக்காரன் பட இயக்குனர் தமிழ் கூறியதாவது, டாணாக்காரன் படத்தோட கதையை இப்போ இருக்கிற முன்னணி ஹீரோ 14 பேர்கிட்ட சொன்னேன். 22 கம்பெனியில் கதை சொல்லி இருக்கேன். 3 வருஷம் கதை சொல்வதை மட்டுமே வேலையா வெச்சு இருந்தேன்.
காலையில் ஒரு முறை கதை சொல்லுவேன். மதியம் ஒருமுறை சொல்லுவேன். ஆரம்பத்துல கதை சொல்லும் போது ரொம்ப ஈடுபாட்டோட சொல்லுவேன். கண்ணீர் எல்லாம் வரும். கதை சொல்லிட்டு இருக்கும்போது மதியம் ஒருத்தருக்கு கதை சொல்லணும் தான் மனசுல ஓடீகிட்டு இருந்தது. மனசு ரொம்ப விரக்தியா ஆகிடுச்சு என்று இயக்குனர் தமிழ் தனது ஆரம்ப கால கஷ்டங்களை வெளிப்படையாக அதில் கூறியிருக்கிறார்.
