தமிழ் சினிமாவில் 90களில் தொடங்கி இன்று வரை முன்னணி நடிகர் என்ற புகழோடு வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கமல்ஹாசன். இவர் நடித்த படங்களில் அவரது தீவிர ரசிகர்களின் ஹிட் லிஸ்டில் இருக்கக்கூடிய படங்களில் ஒன்றாக இருந்து வரும் திரைப்படம் தான் சத்யா. கமலை பலருக்கும் பிடித்ததற்கு காரணமாக இருந்தது இந்த திரைப்படம் தான். இந்தி ரீமேக் திரைப்படமாக இருந்தாலும் ஒரிஜினலை விட இந்த திரைப்படம் அதிக அளவு கொண்டாடப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் படத்தின் மேக்கிங் அமைந்திருந்தது. அத்துடன் கமலின் லுக், தயிர் மற்றும் நடிப்பு என அனைத்தும் மிகவும் ரசிகத் தக்க வகையில் இருந்தது. தமிழ் சினிமாவில் முதன் முதலாக இயக்குனராக அறிமுகமான சுரேஷ்கிருஷ்ணா இயக்கிய முதல் திரைப்படம் தான் சத்யா.
இந்தப் படத்திற்கு கமல்ஹாசன், சுரேஷ் கிருஷ்ணா, மறைந்த இயக்குனர் கே பாலச்சந்தர் உதவி இயக்குனரான அனந்து ஆகியோர் இணைந்து உருவாக்கினர். தனது ராஜ்கமல் நிறுவனம் மூலமாக கமல்ஹாசன் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தார். நாயகன் படத்தில் தாதாவாக தோன்றி தனக்கென்று ஒரு இமேஜ் உருவாக்கிய கமல் சத்யா படத்தில் அப்போதைய இளைஞர்களை பிரதிபலிக்கும் கேரக்டரில் தோன்றி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். ட்ரீம் செய்யப்பட்ட ஷார்ட் ஹேர், ட்ரீம் செய்யப்பட்ட மீசை மற்றும் தாடியுடன் கழுத்தில் கயிறு மற்றும் கையில் காப்பி என கமலின் லுக் பார்ப்பவர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது.
கமலின் இந்த தோற்றம் படம் ரிலீஸ் ஆன சமயத்தில் இளைஞர்கள் மத்தியில் பேஷன் ஆகவே மாறியது. இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக அமலா நடித்திருந்த நிலையில் வடிவுக்கரசி மற்றும் நாசர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஆக்சன் மற்றும் காதல் காட்சிகளுடன் இந்த திரைப்படம் வெளியாகி இருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. இந்த திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 37 வருடங்கள் ஆகி உள்ள நிலையில் படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா சமீபத்தில் அளித்த பேட்டியில் கமல்ஹாசன் ஹேர் ஸ்டைல் குறித்து பேசி உள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், சத்யா படம் எடுப்பதற்கான அனைத்து பேச்சுவார்த்தையும் கமல்ஹாசன் உடன் முடிவடைந்த சமயத்தில் அவர் மொட்டை அடித்திருந்தார்.
சத்யா படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு 40 நாட்கள் இருந்த நிலையில் நான் அமெரிக்கா போயிட்டு வரேன் என்று சொல்லிட்டு கமல் போயிட்டாரு. திரும்ப பத்து நாளைக்கு முன்னாடி வந்து நின்னப்ப அவருடைய ஹேர் ஸ்டைல் பார்த்து நானே பயந்துட்டேன். சின்ன முடியோட வந்து நின்னாரு. செட் எல்லாம் போட்டு ரெடியானதுக்கு அப்புறம் முடி எப்படி வளரும் என்று யோசித்து கொண்டிருந்தப்ப அவர நல்லா உத்துப் பார்த்தா சின்ன முடி நல்ல தாடியோட இருந்தாரு. பாக்குறதுக்கே வித்தியாசமா இருந்துச்சு. அதேசமயம் என்னோட ஃப்ரெண்டு ஒருத்தன் பாம்பேல இருக்கான் அவன் கையில காப்பு போட்டு இருப்பான் என்று அவர் சொன்னதும் அதே மாதிரி கைல காப்பு போட்டு கழுத்துல ஒரு கயிறு கட்டிவிட்டு பார்த்ததும் லுக்கு செம்மையா இருந்துச்சு. உடனே இவர்தான் சத்யா என்று முடிவு பண்ணி அதே லுக்கில் நடிக்க வச்சோம் என்று சுரேஷ் கிருஷ்ணா பேசியுள்ளார்.