இயக்குனர் சுராஜ் மருதமலை, படிக்காதவன், மாப்பிள்ளை, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். காமெடியும் காதலும் கலந்த படத்தை எடுப்பதில் சிறந்தவர் சுராஜ். இயக்கத்தில் ஜெயம் ரவி திரிஷா அஞ்சலி ஆகியோர் நடிப்பில் உருவான படம் சகலகலா வல்லவன்.
இந்த படத்தில் சூரியும், ஜெயம் ரவியும் இணைந்து நடிக்கும் காமெடி காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இந்த படம் கடந்த 2015-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி படு தோல்வி அடைந்தது. சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய இயக்குனர் சுராஜ், சகலகலா வல்லவன் படத்தில் முதலில் நடிக்க வந்தது தனுஷ் தான்.
அவரிடம் கதையை சொல்லிவிட்டேன். அவரும் ஓகே சொல்லிவிட்டார். ஆனால் அந்த சமயம் வேறு ஒரு படத்தில் கமிட் ஆகி இருந்ததால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை. அதனால் தான் கதையை ஜெயம் ரவியிடம் சொன்னேன். அவருக்கும் பிடித்து போனது.
இதில் ஜெயம் ரவி போன்ற அழகான பையனை பிடிக்காமல் த்ரிஷா நடந்து கொண்டதுதான் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. ஒரு நடிகரின் தேர்வு படத்தை தோல்வியடைய செய்து விடும் என்பதை அந்த படத்தில் தான் கற்றுக் கொண்டேன். தனுஷ் சகலகலா வல்லவன் படத்தில் நடித்திருந்தால் வெற்றி பெற்றிருக்கும் என ஓப்பனாக பேசியுள்ளார்.