சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான படம் மதகஜராஜா. இந்த படத்தை ஜெமினி நிறுவனம் தயாரித்தது. இதில் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி உள்ளிட்டார் நடித்தனர். சுருக்கமாக இந்த படத்தை எம்.ஜி.ஆர் என அழைத்து வந்தனர்.
கடந்த 2012-ஆம் ஆண்டு மதகஜராஜா படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. பின்னர் 2013-ஆம் ஆண்டு பொங்கலுக்கு படம் ரிலீஸ் ஆகும் என அறிவித்தனர். ஆனால் விஷாலின் சமர் படம் வெளியானதால் மதகஜராஜா படத்தின் ரிலீஸ் தள்ளி வைத்தனர்.
அதேசமயம் மணிரத்தினத்தின் கடல் படத்தை ஜெமினி நிறுவனம் தான் தயாரித்தது. இதனை தொடர்ந்து கடன் பிரச்சனையில் மாட்டிக் கொண்ட ஜெமினி நிறுவனம் மதகதராஜா படத்தை வெளியிடாமல் நிறுத்தி வைத்தது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் இயக்குனர் சுந்தர்.சியிடம் பத்திரிக்கையாளர் மதகஜராஜா படத்தின் ரிலீஸ் எப்போது என கேள்வி எழுப்பினார்..
அதற்கு பதிலளித்த சுந்தர்.சி அதை நீங்கள் தயாரிப்பாளரிடம் தான் கேட்க வேண்டும். நானும் விஷாலும் சேர்ந்து நாங்களே படத்தை வாங்கிக் கொள்கிறோம் என ஏராளமான முயற்சிகளை எடுத்தோம். ஆனாலும் அவர் அதற்கு சம்மதிக்கவில்லை. ஏற்கனவே ஒரு படத்தை ரிலீஸ் செய்ததில் அவர் கடனில் சிக்கிக்கொண்டார். அதிலிருந்து மீண்டு வராததால் மதகஜராஜா படத்தை ரிலீஸ் செய்யாமல் உள்ளார் என ஓப்பனாக பதில் அளித்துள்ளார்.
View this post on Instagram